UNENDING WAR
I wished
to believe
that the time of war
was over
Yet
the world is crooked
Death cannot steal
the mahilampoo perfume
of life
She writes poems
that would melt
great walls
Sorrow stands
with her
Even while the world
drowns in a tempestuous storm
the bird returns to
its nest.
The baby bird sings
Its song
would block
and stop
at least
a single missile
I believe.
முடியாத போர்க்காலம்
போர்க்காலம் முடிந்து விட்டது
எனத்தான்
நம்ப விரும்பினேன்
எனினும் உலகம் கோணலானது
உயிரின் மகிழம்பூ நறுமணத்தை
இறப்பு
திருட முடியாது
நெடுஞ்சுவரைக் கரைக்கும்
கவிதைகளை ஒருத்தி எழுதுகிறாள்
அழுகை துணை இருக்கிறது
பெரும் புயலில் உலகம் தத்தளிக்கும் போதும்
பறவை கூடு சேர்கிறது
குஞ்சுக் குருவி பாடுகிறது
அதன் பாடல்
ஒரு ஏவுகணையையாவது
தடுத்து நிறுத்தி விடும்
நம்புகிறேன்.
(Feb 22, 2022)